பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் –...!

Thursday 2 May 2013

ஆன்லைன் காயலாங்கடை!


ஆன்லைன் காயலாங்கடை!

சென்னையை சேர்ந்த ஜெகன் மற்றும் சுஜாதா குப்பையை கையாளுவதில் புதிய அணுகுமுறையை உருவாக்கியுள்ளனர். இவர்களுடைய குப்பைத்தொட்டி டாட்காம் என்னும் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டால் வீட்டுக்கே வந்து மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளான புத்தகங்கள்,பாட்டில்கள்,அலுமினியம்,எலக்ட்ரானிக் பொருட்கள்,தாமிரம் என அனைத்தையுமே பெற்றுக்கொள்கின்றனர். அதாவது ஆன்லைன் காயலாங்கடையை போன்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். பெறப்படும் குப்பைகளுக்கு உரிய பணத்தினையும் நியாயமான முறையில் தந்தும் விடுகின்றனர். இதன் மூலம் ஆபத்தை விளைவிக்கும் குப்பைகளை தெருவில் கொட்டுவது குறைவதோடு சுற்றுசூழலுக்கும் நல்லது , அதோடு மக்காத குப்பைகளை மக்கும் குப்பைகளோடு கலந்து கொட்டுவதும் தடுக்கப்பட்டுள்ளது என்கிறார் ஜெகன். இம்முயற்சிக்கு சென்னையின் பலபகுதி மக்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. மேலும் விபரங்களுக்கு http://www.kuppathotti.com/ என்ற இணையதளத்தை காணலாம்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Thursday 18 April 2013

இணைய இணைப்பு இல்லாத வேளையில் இணையத்தளங்களை படிக்க இலகு வழி.


இணைய இணைப்பு இல்லாத வேளையில் இணையத்தளங்களை படிக்க இலகு வழி.

இன்றைய தொழில்நுட்ப உலகில் கட்டற்ற தகவல் களஞ்சியமாக இணையத்தளங்கள் விளங்குகின்றன. அவ்வாறான இணையத்தளங்களை இணைய இணைப்பு அற்ற நிலையில் பார்வையிடுவது முடியாத காரியமாகும்.

அவ்வாறு இணைய இணைப்பு உள்ள சந்தர்ப்பத்தில் பார்வையிட்ட ஒரு இணையத்தில் காணப்படும் இணையப் பக்கம் ஒன்றினை சேமித்து வைத்து மீண்டும் இணைய இணைப்பு அற்ற சந்தர்ப்பத்தில் பார்வையிட முடியுமாயினும் அத்தளத்திலுள்ள அனைத்து விடயங்களையும் ஒரே தடவையில் சேமித்து வைக்க முடியாது. (http://depositfiles.com/files/t6xls1er9)

எனவே இதற்கு தீர்வாக WebCopy எனும் சிறிய அப்பிளிக்கேஷன் காணப்படுகின்றது. இதில் சேமிக்கப்படவேண்டிய இணையத்தள முகவரியையும், கணினியில் சேமிக்கப்பட வேண்டிய இடத்தினையும் கொடுத்தால் போதும் குறித்த இணையத்தளத்தின் அத்தனை பக்கங்களும் சேமிக்கப்பட்டுவிடும். பின்னர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவ்விணையத்தளத்தினை படித்து பயன்பெறலாம்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Tuesday 26 February 2013

பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும்...!


பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும்...!

பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும்.

இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?

உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

1.உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E)கொடுத்து MY COMPUTER செல்லவும்.

2.அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3.தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேரந்தெடுக்கவும்.

4.பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.

5.அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.

6.அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.

இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை கருத்துரையில் சொல்லுங்கள்.

மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்...!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



உங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்க.



 முதலில் நாம் இணையத்திற்கு வயர்கள் மூலமாக இணையத்தில் உலாவந்தோம். ஆனால் இப்பொழுது அனைவரும் வயர் ப்ரீ அல்லது வயர்லெஸ் மூலமாக வேகமாக இணையத்தில் உலா வருகிறோம்.

ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உள்ளது. நம் வீட்டில் வயர்லெஸ் மோடம் வைத்து நாம் அடுத்த ரூமில் இருந்து கொண்டு லேப்டாப்பில் இணையத்தில் உலாவருவோம்.

 அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலாவந்தால் என்ன ஆகும்.

 நம் காசும் போச்சு நம் தனி மனித இணைய பாதுகாப்பும் போச்சு என்று கொள்ள வேண்டியது தான். இது போல நடந்தால் கண்டுபிடிக்க நம் கணனி தவிர வேற எந்த கணனிகள் நம் வயர்லெஸ் மோடம் வழியாக இயங்குகிறது என்று தெரிந்து கொள்ள Who is on my Wifi என்ற மென்பொருள் உதவுகிறது.
http://download.cnet.com/Who-Is-On-My-Wifi/3000-18508_4-75179802.html

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Tuesday 12 February 2013

Google Chrome பற்றி தெரிந்துவைத்திருக்கவேண்டிய Keyboard Shortcuts

Google Chrome பற்றி தெரிந்துவைத்திருக்கவேண்டிய Keyboard Shortcuts


Google Chrome தான் இன்று மிக அதிகமானோர் பயன்படுத்தும் ப்ரௌசெர். பல வித வசதிகளோடு வரும் இதில் நாம் பயன்படுத்த ஏராளமான Keyboard Shortcuts உள்ளன. இவை நம் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகின்றன. இந்த பதிவில் நாம் அறிந்திருக்க வேண்டிய 35 - Keyboard Shortcuts பார்ப்போம்.

Ctrl+N   புதிய விண்டோ ஓபன் செய்ய
Ctrl+T    புதிய Tab ஓபன் செய்ய
Ctrl+O   குறிப்பிட்ட File ஒன்றை ChormeChrome - இல் ஓபன் செய்ய.
Ctrl+Shift+T        கடைசியாக Close செய்த Tab – ஐ ஓபன் செய்ய.
Ctrl+1 முதல் Ctrl+8 குறிப்பிட்ட Tab க்கு செல்ல
Ctrl+9    கடைசி Tab க்கு செல்ல
Ctrl+Tab or Ctrl+PgDown              அடுத்த Tab க்கு செல்ல
Ctrl+Shift+Tab or Ctrl+PgUp        முந்தைய Tab க்கு செல்ல
Alt+F4 or Ctrl + Shift + W               தற்போதைய விண்டோவை Close செய்ய.
Ctrl+W or Ctrl+F4             தற்போதைய tab அல்லது pop-up Close செய்ய.
Backspace           முந்தைய பக்கங்களுக்கு செல்ல
Shift+Backspace               Next Page க்கு செல்ல (ஓபன் செய்து இருந்தால்)
Alt+Home           Home Page க்கு செல்ல
Alt+F or Alt+E or F10       Chrome Crunch மெனுவை ஓபன் செய்ய
Ctrl+Shift+B        Bookmarks Bar – ஐ தெரிய/மறைய வைக்க
Ctrl+H   History page – ஐ ஓபன் செய்ய
Ctrl+J     Downloads page – ஐ ஓபன் செய்ய
Shift+Esc              Task Manager – ஐ ஓபன் செய்ய
F6 or Shift+F6    URL, Bookmarks Bar, Downloads Bar போன்றவற்றை Highlight செய்ய. [எது இருக்கிறதோ அது தெரிவு ஆகும்]
Ctrl+Shift+J         Developer Tools – ஐ ஓபன் செய்ய
Ctrl+Shift+Delete             Clear Browsing Data – வை ஓபன் செய்ய
F1           Help Center – ஐ ஓபன் செய்ய
Ctrl+L or Alt+D   URL Highlight செய்ய
Ctrl+P    தற்போதைய பக்கத்தை பிரிண்ட் செய்ய
Ctrl+S    தற்போதைய பக்கத்தை சேவ் செய்ய
F5 or Ctrl+R         Refresh செய்ய
Esc          Loading – ஐ நிறுத்த
Ctrl+F    find bar – ஐ ஓபன் செய்ய
Ctrl+U   தற்போதைய பக்கத்தின் Source Page – ஐ பார்க்க
Ctrl+D   குறிப்பிட்ட பக்கத்தை bookmark செய்ய
Ctrl+Shift+D       ஓபன் ஆகி உள்ள எல்லா பக்கங்களையும் Bookmark செய்ய
F11         Full-screen க்கு மாற்ற அல்லது Full Screen – இல் இருந்து Normal க்கு திரும்ப
Space bar            பக்கத்தை Scroll down செய்ய
Home    பக்கத்தின் Top க்கு செல்ல
End        பக்கத்தின் Bottom க்கு செல்ல

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday 27 January 2013

HARD DISK -ஐ பாதுக்காப்பது எப்படி?


HARD DISK -ஐ பாதுக்காப்பது எப்படி?

உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.

மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.

இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.

இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.

எப்படி செய்வது எனக் காண்போம் வாருங்கள்.

1.My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.

2.அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.

3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.

4.இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.

உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.

5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக் கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள்.மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப் படும்.

6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ் ) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.

உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலில் chkdsk (check Disk )செய்யுங்கள். உங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள்.







இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Saturday 19 January 2013

உலகின் சிறந்த 25 ‘ஐடி’ கம்பெனிகள்.


உலகின் சிறந்த 25 ‘ஐடிகம்பெனிகள்...

ஐடிபெரும்பாலான இளைய சமுதாயத்தினரின் இதயத்துடிப்பு. ஐடிஇல்லையென்றால் எதுவும் இல்லையென்ற நினைப்புவேறு. கண்டிப்பான உண்மைதான். அனைத்து தொழிலிலும் ஐடிமாயம் பரவத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில் உலகில் பல்வேறு ஐடிசார்ந்த மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் சிறந்ததென ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வின் சாராம்சம் இங்கே தரப்பட்டுள்ளது. உலகின் சிறந்த 25 ‘ஐடிகம்பெனிகள்

1. Microsoft
2. IBM
3. Oracle
4. SAP
5. Ericsson
6. Hewlett Packard
7. Symantec
8. Nintendo
9. Activision Blizzard
10. EMC
11. Nokia Siemens Networks
12. CA
13. Electronic Arts
14. Adobe
15. Alcatel-Lucent
16. Cisco
17. Sony
18. Hitachi
19. Dassault
20. BMC
21. SunGard
22. Autodesk
23. Konami
24. Salesforce.com
25. Sage

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



கற்பழிப்பிலிருந்து காப்பாற்ற புதிய மொபைல் அப்ளிகேஷன்


கற்பழிப்பிலிருந்து காப்பாற்ற புதிய மொபைல் அப்ளிகேஷன் 'Me against Rape'

புதுடில்லி பேருந்து பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் காவல் எண் 100க்கு தொலைபேச முயன்றுள்ளார், ஆனால் அதற்க்குள் அவரது கைபேசியை பிடுங்கிவிட்டதால் காவல்துறைக்கு தகவல் கொடுக்க இயலவில்லை.

இந்த புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒரே ஒரு கிளிக்கில் பல்வேறு விசயங்களை செய்துவிடும்.

1) ஏற்கனவே பதியப்பட்ட செய்தியை குறுந்தகவலாக முன்னரே பதியப்பட்ட எண்ணுக்கு அனுப்பலாம்
2) ஏற்கனவே பதியப்பட்ட குறிப்பிட்ட எண்களை அழைக்கலாம்
3) நடக்கும் உரையாடல்களை பதிவு செய்யலாம்
4) கூகிள் மேப்புடன் இணைக்கப்பட்டு இந்த மொபைல் போன் பயன்படுத்துபவர் சென்ற‌ இடங்களையெல்லாம் பதிவு செய்யலாம், இதனை ஆதாரமாக கொள்ளலாம்.

இதை அனுப் உன்னிகிருஷ்ணன்(24), குணவத் (23) ஜெயேஷ் (23) என்ற மூன்று பேர் உருவாக்கியுள்ளனர்.

இந்த அப்ளிகேசனை இங்கே டவுன்லோட் செய்யலாம்

இந்த அப்ளிகேஷன் அனைவருக்கும் சென்றடைய ஷேர் செய்யுங்கள், பிடிச்சிருந்தா லைக்குங்கள்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday 30 December 2012

இமெயிலில் புதைந்த புகைப்படங்களை தேடி எடுக்க


இமெயிலில் புதைந்த புகைப்படங்களை தேடி எடுக்க!
இமெயிலில் எத்தனையோ புகைப்படங்களை அனுப்பி வைத்திருப்பீர்கள்.எத்தனையோ முறை உங்களுக்கு இமெயில் வழியேபுகைப்படங்கள் வந்து சேர்ந்திருக்கும்.எத்தனை புகைப்படங்கள் வந்தன,யாருக்கெல்லாம் அனுப்பினோம் என்பதை கூட மறந்திருப்பீர்கள்!
ஆனால் இமெயில் அனுப்பிய அல்லது அனுப்பிவைக்கப்பட்ட படங்கள் இப்போது தேவை என்றால் என்ன செய்வீர்கள்?
ஜிமெயிலில் பழைய மெயில்களை தேடும் வசதி இருப்பதால் கடந்த கால மெயில்களில் தேடிப்பார்க்கலாம்.இருந்தாலும் ஒவொரு மெயிலாக தேடி அதில் புகைப்படம் இருக்கிறதா என்று பார்த்து அவற்றை சேமித்து வைப்பது என்பது தலை சுற்ற வைத்துவிடும் தான்.
இப்படி இமெயிலில் புதைந்த பழைய புகைப்படங்களை தேடி எடுக்கும் எண்ணமோ தேவையோ ஏற்பட்டால் உதவுவதற்காக என்றே ஒரு இணையசேவை உருவாக்கப்பட்டுள்ளது.
லாஸ்ட்போட்டோஸ் என்னும் பெயரிலான அந்த சேவை இமெயில் தொலைந்த புகைப்படங்களை மீண்டும் தேடி எடுக்க உதவுகிறது.
வின்டோஸ் சார்ந்த செயலியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவையை லாஸ்ட்போட்டோஸ் தளத்தில் இருந்து டவுண்லோடு செய்து உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவிக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு உங்கள் இமெயில் முகவரியை குறிப்பிட்டு பாஸ்வேர்டையும் குறிப்பிட்டு உள்ளே நுழைய அனுமதித்தால் இந்த சேவை கடந்த கால இமெயில்களில் அனுப்பிய மற்றும் வந்து சேர்ந்த புகைப்படங்களை எல்லாம் தேடி எடுத்து அழகாக தொகுத்து தந்து விடும்.
சில புகைப்படங்கள் அளவில் சின்னதாக,தம்ப்நைலாக மட்டுமே இருக்கும்.அத்தகைய புகைப்படங்களை தேட வேண்டாம் என்று வடிக்கட்டச்சொல்லும் வசதியும் இருக்கிறது.அதே போல குறிப்பிட்ட வடிவிலான புகைப்பட கோப்புகள் தேவை இல்லை என்றோ குறிப்பிட்ட காலத்திற்கு முன் வந்த படங்கள் தேவை இல்லை என்றோ வடிக்கட்டிக்கொள்ளலாம்.
புகைப்படங்கள் தேடி எடுக்கப்பட்டு கொண்டிருக்கும் போதோ அந்த படங்கள் உங்கள் டெஸ்க்டாப்பிலும் காண்பிக்கப்படும்.
அந்த படங்களை அப்படியே கிளிக் செய்து பேஸ்புக் அல்லது டிவிட்டர் போன்ற சேவைகள் வழியே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.பேஸ்புக்கும் டிவிட்டரும் இப்போது தானே பிரபலமாகி இருக்கின்றன.பேஸ்புக் வருவதற்கு முன் இமெயிலில் தானே பெரும்பாலும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டிருப்போம்.அப்படி பகிர்ந்து கொண்டு மறந்து விட்ட படங்களை இப்போது தேடி எடுத்து பேஸ்புக்கில் பகிர்வது அருமையானது தானே.
இந்த புகைப்படங்கள் எல்லாம் உங்கள் டெஸ்க்டாப்பிலும் சேமித்து வைக்கப்படும்.அவற்றை அழகாக கோப்புகளில் பிரித்து வைத்துக்கொள்ளலாம்.
ஜிமெயில் உட்பட பல்வேறு இமெயில் கணக்குகளில் இந்த சேவை செயல்படுகிறது.
இமெயிலில் அனுப்பிய புகைப்படங்களை மீட்டெடுக்க விரும்புகிறவ‌ர்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.அதே போல புகைப்படங்கள் வாயிலாக கடந்த கால நினைவில் மூழ்க நினைப்பவர்களுக்கும் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.புகைப்படங்களை மீட்டெடுப்பதோடு அதனை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் கைகொடுப்பது இந்த சேவையின் சிறப்பம்சம்.
புகைப்படம் சார்ந்த சேவைகளில் மேலும் ஒரு பயனுள்ள சேவை.
இணையதள முகவரி;http://lostphotosapp.com/

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday 9 December 2012

சிறுவர்களுக்கான நவீன பாதுகாப்பான தேடியந்திரங்கள்


இன்றைய நவீன காலகட்டத்தில் 6 வயது முதலே இணையத்தை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
எனவே சிறுவர்களுக்கு ஏற்றாற் வகையில், பல தேடியந்திரங்கள் உள்ளன.

Aga-Kids

இந்த தேடியந்திரம் கொஞ்சம் விஷுவலானது. அதாவது படங்களாக தகவல்கள் தேவையா என்றும் தீர்மானித்து கொள்ளலாம்.

தேடுவதற்கு முன்பே தவல்கள் சாதாரணமாக தோன்ற வேண்டுமா அல்லது காட்சி ரீதியாக (விஷுவலாக)தோன்ற வேண்டுமா என தெரிவு செய்து கொள்ளலாம்.

இதை தவிர கார்ட்டூன், விளையாட்டுகள், பொம்மை செய்தல் ஆகிய தனிப்பகுதிகளும் இருக்கின்றன. இணையத்திலேயே வரைவதற்கான தனிப்பகுதியும் இருக்கிறது.

அது மட்டும் அல்ல தேட கட்டத்திற்கு மேலேயே பல குறிச்சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் கிளிக் செய்து பார்க்கலாம்.

http://aga-kids.com/

Kidrex.org

இதே போலவே கிட்ரெக்ஸ்.ஆர்ஜி என்னும் தேடியந்திரம் அழகான டைனசோர் படத்தோடு வரவேற்கிறது.

இந்த தேடியந்திரம் கூகுளை பயன்படுத்தி சுட்டீஸ்களுக்கு பொருத்தமான தளங்களை மட்டும் தருகிறது.

இதில் குழந்தைகளுக்கு என்று தனிப்பகுதியும் பெற்றோர்களுக்கு என்று தனிப்பகுதியும் இருக்கிறது.

குழந்தைகளுக்கான பகுதியை கிளிக் செய்தால் குட்டீஸ் வரைந்த அழகான ஓவியங்களை பார்க்கலாம்.

http://www.kidrex.org/

KidsClick.org

கிஸ்கிளிக்.ஆர்ஜி தேடியந்திரம் சிறுவர்களுக்காக என்று நூலகர்களால் உருவாக்கப்பட்டது. எனவே ஹோம் ஒர்கிற்கு தேவையான தகவல்களை இதில் தைரியமாக தேடலாம்.

http://kidsclick.org/

Ask Kids

ஆஸ்க்கிட்ஸ் தேடியந்திரத்தில் எந்த சந்தேகத்தையும் கேள்வியாக கேட்டு தேடலாம். நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கான பதில்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இதை தவிர விளையாட்டு மற்றும் திரைப்படங்கள் பற்றியும் தேடலாம்.

http://www.askkids.com/

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்